Friday, 1 June 2007

இஸ்ரேலைப் பகிஸ்கரி!


இஸ்ரேலைப் பகிஸ்கரி

'' இஸ்ரேலைப் பகிஸ்கரி '' இயக்கத்தில் இணைய பிரித்தானியாவின் மிகப்பெரிய தொழிற்சங்கம் உத்தேசம்.
ஏற்கெனவே இடம்பெற்றுவரும் " இஸ்ரேலைப் பகிஸ்கரி" இயக்கத்தில், பிரித்தானியப் பல்கலைக்கழக பயிற்றுனர் சங்கத்தினைப் பின் பற்றி, 13 இலட்சம் அங்கத்தவர்களுடைய பொதுத்துறை ஊழியர் தொழிற் சங்கம் இணைய உத்தேசித்துள்ளது.
ஜூன் மாதம் 19ம் தேதி நடைபெறவுள்ள வருடாந்த தேசிய மாநாட்டின் விவாத நிகழ்ச்சிநிரலில் இது இணைக்கப்பட்டுள்ளதென அவ்வமைப்பின் பேச்சாளர் Mary McCuri தெரிவித்தார்.
இம்முயற்சிக்கு கேம்பிறிட்ஜ், ஒக்ஸ்போட் பல்கலைக்கழக பெரும் புள்ளிகளிடம் இருந்து பலத்த எதிர்ப்புக் கிழம்பியுள்ளதோடு, கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை எப்படி இருப்பினும்,
* 2006 இல் லெபனானையும் காசாப் பகுதியையும் ஆக்கிரமித்தது;
* பாலஸ்தீன நிர்வாகசபைக்கு சேரவேண்டிய திறைசேரி வருமானத்தை கையகப்படுத்தியது;
* ஜனவரி 2006 இல் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிகளுடன் பேசமறுத்தது;
* காசாவின் எல்லைப்பகுதிகளை மீண்டும் மூடியது;
* சட்டவிரோத இனக்குரோத கறுப்புச்சுவரை தொடர்ந்து கட்டியெழுப்புவது;
ஆகியவற்றுக்கெதிரான பாலஸ்தீன மக்களிடையே இயங்கும் 170 " தொண்டு நிறுவனங்களின் '' வழியில் நாமும் இருப்பதாக கருதுகின்றோம் எனவும் அவர் தெரிவித்தார்.
இம்முயற்சியை அமெரிக்காவும் இஸ்ரேலும் வன்மையாகக் கண்டித்து, அத்தீர்மானத்தை நிறைவேற்றும் முயற்சியைக் கைவிடவேண்டும்மெனவும் கோரியுள்ளன.
தகவல்: New York Times - செய்தித் தொகுப்பு ENB

No comments: