Monday, 16 April 2007

எமது அடிப்படை முழக்கங்கள்

எமது அடிப்படை முழக்கங்கள்
'மார்க்சிச லெனினிச மா ஓ சே துங் சிந்தனை' வழி நடப்போம்!
பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதத்தை உயர்த்திப் பிடிப்போம்!
உலக சோசலிச தேசிய ஜனநாயக விடுதலைப் புரட்சி்யை ஊக்குவிப்போம்!ஏகாதிபத்தியம் ஒழிக!
உலக தொழிலாளார்களின் ஓடுக்கப்படும் தேசங்களின் புரட்சிப் பிரவாகத்துடன் ஓன்று சேருவோம்!
தேசிய ஒடுக்குமுறை ஒழிக! சுயநிர்ணய உரிமை வெல்க!
ஏகாதிபத்திய சுரண்டல் ஒழிக! சுதந்திர தேசங்கள் ஒளிர்க!
சிங்கள இனவெறி பாசிச இலங்கை அரசு ஒழிக! மக்கள் ஜனநாயக குடியரசு மலர்க!
தமிழ் தேசிய சுயநிர்ணய உரிமை போராட்டம் வெல்க!
இந்திய விஸ்தரிப்புவாதத்தை தோற்கடிப்போம்!
இறுதி வெற்றி புரட்சிகர ஈழ மக்களுக்கே!

எமது செயல் முழக்கங்கள்
ஒற்றைத் துருவ அமெரிக்க ஏகாதிபத்திய உலக மேலாதிக்க கனவை முறியடிப்போம்!
ஆசியக்கண்டத்தை அபகரிக்க அனுமதியோம்!
ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களின் காலனித்துவ ஒடுக்குமுறையை எதிர்ப்போம்!
ஈரான் மீது அமெரிக்க ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களின் யுத்த முஸ்தீபுகளை எதிர்ப்போம்!
இனவெறிப் பாசிஸ இலங்கை அரசே,
அரச பயங்கரவாத, தமிழினப் படுகொலை யுத்தத்தை நிறுத்து!
பேச்சுவார்த்தை நாடகத்தை முடித்து, ஈழத்தமிழரிடையே சர்வஜன வாக்கெடுப்பு நடத்து!
ஈழத்தமிழரின் விடுதலை யுத்தம், நீதியான தற்காப்பு யுத்தமாகும்!
ஒடுக்கும் சிங்கள தேசம், ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்காத வரையில், தமிழ் ஈழத்தனியரசே-பிரிவினையே-ஈழத்தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வாகும்!
1987-இந்திய இலங்கை ஒப்பந்தம், 2002-ஒஸ்லோ ஒப்பந்தங்களைக் கிழித்தெறிவோம்!
உலகெங்கும் தேசிய இன ஒடுக்குமுறையை உக்கிரப்படுத்தும் காரணியான நவீன ஏகாதிபத்தியம்- "சர்வ தேச சமூகம்"- நமது எதிரியாகும்!
தென்னாசியாவின் ஜனநாயகவிரோத,எதிர்ப்புரட்சிகர,பிற்போக்கு கொத்தளமான இந்திய விஸ்தரிப்புவாத அரசு நமது எதிரியாகும்!

No comments: